
கடவுச் சீட்டுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக முன்கூட்டியே நேரம் ஒதுக்கிக் கொள்வதற்கான சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் படி, ஒக்டோபர் மாதத்திற்கான முன்பதிவு வசதிகள் முடிவடைந்துவிட்டதையடுத்து நவம்பர் மாதத்தில் மீண்டும் இந்த சேவைகள் ஆரம்பிக்கப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
முன்னதாக தினமும் 4000 பாஸ்போர்ட்கள் விண்ணப்பிக்கப்படுகின்ற நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் தினமும் 1000 கடவுச் சீட்டுகள் வழங்கப்படுவதாக குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, 18 ஆம் திகதி ஒரு நாள் மற்றும் பொது சேவையின் கீழ் பெற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 4700 ஆக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், நவம்பர் முதல் இந்த நிலைமை குறையும் என்று நம்புவதாக திணைக்களத்தின் கடவுச் சீட்டு பிரிவு கட்டுப்பாட்டு அதிகாரி எச்.பீ.சந்திரலால் தெரிவித்துள்ளார்.