February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சவூதி அரேபியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சவூதி அரேபியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரை சவூதி அரேபிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் வரவேற்றுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம், சக்தி மற்றும் சவூதியில் தொழில் புரியும் பாகிஸ்தான் பிரஜைகளின் நலன் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக சவூதி அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் 2 மில்லியனுக்கு அதிகமான பாகிஸ்தானியர்கள் தொழில் வாய்ப்புகளில் ஈடுபட்டு வருவதோடு, இரு நாடுகளுக்கும் இடையே 3.6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஏற்றுமதி வர்த்தக உறவு காணப்படுகின்றது.

இரு நாடுகளுக்கும் இடையே சக்தி, அடிப்படை வசதிகள், போக்குவரத்து, நீர் தொலைத்தொடர்பு, கைதிகள் பரிமாற்றம் மற்றும் போதை தடுப்பு போன்ற துறைகளில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.