இலங்கை முழுவதும் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் மறு அறிவித்தல் வரையில் திறக்க முடியாதவகையில் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறாக நாடு பூராகவும் 4500 மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
பயணக் கட்டுப்பாடு காரணமாக மே 21 ஆம் திகதி முதல் நாடு பூராகவும் மதுபான விற்பனை நிலையங்களை மூட நடவடிக்கையெடுக்கப்பட்டது.
எனினும் சில பிரதேசங்களில் கட்டுப்பாட்டுக்கு மத்தியிலும் இரகசியமான முறையில் மதுபான விற்பனை நிலையங்களை திறந்து வியாபார நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே அவற்றுக்கு சீல் வைக்க தீர்மானித்ததாக கலால் வரித் திணைக்களத்தின் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.