தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இதுவரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளின் அடிப்படையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக பல தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
இந்த தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்திலும், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இரட்டை இலை சின்னத்திலும், மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகள் டோர்ச் லைட் சின்னத்திலும், அமமுக மற்றும் கூட்டணி கட்சிகள் குக்கர் சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி தனித்து விவசாயி சின்னத்திலும் போட்டியிட்டது.
தற்போது தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இரவு 9 மணி வரையில் வெளியாகியுள்ள வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரப்படி திமுக கூட்டணி 157 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 77 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
எடப்பாடி தொகுதியில் அதிமுக முதல்வர் வேட்பாளர் கே.பழனிசாமி முன்னிலையில் இருப்பதுடன், கொளத்தூர் தொகுதியில் திமுக முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார்.
அத்துடன் சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிபெற்றுள்ளார்
இதேவேளை கோவை தெற்குத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசன் ஆரம்பத்தில் முன்னணில் இருந்த நிலையில் இறுதியில் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றிபெற்றுள்ளார்.
இதுவரை 234 தொகுதிகளில் கட்சிகள் வாக்கு எண்ணிக்கையில் முன்னணியில் உள்ள தொகுதிகள் மற்றும் வெற்றி அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை வருமாறு.
கட்சி | முன்னிலை | வெற்றி |
திமுக | 159 | 159 |
அதிமுக | 7575 | |
ஏனையவை | 0 | 0 |