May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கமல்ஹாசனை தோற்கடித்து கோவை தெற்கு தொகுதியில் வெற்றிபெற்றார் வானதி சீனிவாசன்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தோல்வியடைந்துள்ளார்.

பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் 1500க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் கமல்ஹாசனை தோற்கடித்து தொகுதியில் வெற்றிப் பெற்றுள்ளார்.

இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், ஆரம்பத்தில் கமல்ஹாசனும் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரும் மாறி மாறி முன்னிலை வகித்தனர்.

இந்நிலையில் மூன்றாவது நிலையில் இருந்த வானதி சீனிவாசன் வாக்கு எண்ணிக்கையில் முன்னேறியதை தொடர்ந்து அவருக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இறுதியில் 1500க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் முன்னிலைக்கு வந்துள்ளார்.

கமல்ஹாசன் போட்டியிட்ட முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.
அவர் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதி தருணத்தில் அந்த சந்தர்ப்பம் நழுவி போயிருக்கிறது.

நீண்ட வருடங்களுக்கு பிறகு சினிமாவிலிருந்து அரசியலில் குதித்து தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர் தான் கமல்ஹாசன்.
அரசியல் மீது கொண்ட ஈர்ப்பால் 2018 மக்கள் நீதி மையம் என்ற கட்சியை ஏற்படுத்தினார்.

அதிலிருந்து தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு சட்டமன்றத் தேர்தலில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் ஐஜேகே ஆகிய கட்சியுடன் கூட்டணி வைத்து மக்கள் நீதி மையம் 154 தொகுதிகளிலும் இதர கட்சிகள் 80 தொகுதிகளிலும் கூட்டணி வைத்து போட்டியிட்ட போதும் அந்தக் கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் தொல்வியடைந்துள்ளன.