May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி தொடர்கிறது

இந்தியாவின் மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள போதும், முதல்வர் மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியை தழுவியுள்ளார்.

அந்தத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரிக்கும் மம்தா பானர்ஜிஇக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

294 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இதற்கமைய பிற்பகல் 2மணியளவில் சுவேந்து அதிகாரியை தோற்கடித்து மம்தா 1200 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இன்று மாலை தேர்தல்கள் ஆணையகத்தினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பில் சுவேந்து அதிகாரி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நந்திகிராம் தொகுதியில் மம்தாவை எதிர்த்து போட்டியிட்டு தோற்கடிப்பேன் என அவரது முன்னாள் உதவியாளர் சுவேந்து அதிகாரி சவால் விடுத்திருந்த நிலையிலேயே மம்தா அந்தத் தொகுதியில் போட்டியிட்டார்.

இந்நிலையிலேயே அவர் அந்தத் தொகுதியில் தோல்வியடைந்துள்ளார். தேர்தல்கள் ஆணையத்தின் அறிவிப்பின் பின்னர், மக்களின் தீர்ப்பை தான் ஏற்றுக்கொள்வதாக மம்தா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் இதுவரையான தேர்தல்கள் முடிவுக்கமைய திரிணாமுல் காங்கிரஸ் 200 ற்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றவுள்ளது.