பாகிஸ்தானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையர் ஒருவர் பாகிஸ்தானில் சித்திரவதை செய்து, கொலை செய்யப்பட்ட சம்பவத்தை ஜனாதிபதி கண்டித்துள்ளார்.
அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவத்தால் தாம் மிகுந்த கவலை அடைந்ததாக ஜனாதிபதி ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.