
பாகிஸ்தான் தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராக பணிபுரிந்த இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கி, கொல்லப்பட்ட சம்பவத்தில் 100 க்கு மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் பொலிஸார் இதுதொடர்பான கைது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான பர்ஹான் இத்ரீஸ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சியால்கோட்டில் இலங்கையர் கொல்லப்பட்ட சம்பவத்தை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கடுமையாக கண்டித்துள்ளார்.
சிசிடிவி காட்சிகளைப் பார்த்து, பொலிஸார் கைதுகளை மேற்கொண்டு வருகின்றனர்.