May 25, 2025 16:59:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடவுச்சீட்டு விநியோக பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

கொரோனா தொற்றுக் காரணமாக சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய அவசர தேவை கொண்ட நபர்களுக்கு மாத்திரம் கடவுச்சீட்டு ஒரு நாள் சேவையின் கீழ் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு பத்தரமுல்லவில் அமைந்துள்ள திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் பல அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் பாதுகாப்பான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவானோருக்கு மாத்திரம் வெளிநாட்டு கடவுச்சீட்டை விநியோகிக்க குறைந்தளவிலாள ஊழியர்கள் சேவைகளில் அமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.