May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கொவிட் தொற்று உறுதி!

File Photo

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அக்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையின் போது அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி அவரை தனிமைப்படுத்தி அவருக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.