
‘அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசியின் 2வது டோஸை பெற்றுக் கொள்ள மக்கள் குழப்பமடைய வேண்டாம் என சுகாதார அமைச்சு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
பல பகுதிகளிலும் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறினார்.
அத்தோடு, மேல் மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு சுகாதார பிரிவுகளிலும் உள்ள ஒரு மருத்துவமனையில் ‘அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசியின் 2வது டோஸை பொது மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இலங்கையில் ‘அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசியின் 1 வது டோஸை பெற்றுக் கொண்ட 4 90,000 பேர் 2 வது டோஷுக்காக நீணடகாலமாக காத்திருந்தனர்.
இந் நிலையில் ஜப்பானில் இருந்து நன்கொடையாக 728,460 ‘அஸ்ட்ரா செனிகா’ கொவிட் தடுப்பூசி டோஸ்கள் நேற்று நாட்டை வந்தடைந்தன .
இந்நிலையில், மேல் மாகாணத்தில் முன்னுரிமை அடிப்படையில் ‘அஸ்ட்ரா செனெகா’ தடுப்பூசியின் 2வது டோஸை பொதுமக்களுக்கு வழங்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.