
தமிழகம், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 78 இலங்கையர்களை விடுதலை செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கவனயீர்ப்பு போரட்டம் யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது உறவுகளை விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
அத்தோடு குறித்த போராட்டமானது தமது உறவுகளை விடுதலை செய்யும் வரை தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.