ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை சபாநாயகர் சேர் லின்ட்ஸே ஹோய்லை பிரிட்டனுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் சரோஜா சிறிசேன சந்தித்துள்ளார்.
இலங்கை மற்றும் பிரிட்டன் பாராளுமன்றங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதில் கிரிக்கெட் பெரிதும் உதவக் கூடும் என்று ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை சபாநாயகர் சேர் லின்ட்ஸே ஹோய்ல் தெரிவித்துள்ளார்.
இரு நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சர்வ கட்சி குழு நிறுவப்பட்டதன் ஊடாக நெருக்கமான உறவுகள் செழித்து வருவதாகவும் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை சபாநாயகர், இலங்கை உயர் ஸ்தானிகரிடம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை- பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டியொன்றை நடத்துவதன் மூலம் உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளலாம் என்றும் உயர் ஸ்தானிகர் சரோஜா பரிந்துரைத்துள்ளதோடு, அதனை சேர் லின்ட்ஸேயும் வரவேற்றுள்ளார்.
இரு நாடுகளினதும் கொரோனா நிலைமைகள், மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகள் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்திக்கொள்ளல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.
Read more about this week's meeting on the Parliament website: https://t.co/3B7obXdAFA
@SLHCinLondon pic.twitter.com/rtkLjYLDEq— Sir Lindsay Hoyle (@CommonsSpeaker) May 26, 2021