விமான நிலையத்தை மூடுவது அல்லது சுற்றுலாப் பயணிகளின் வருகையை கட்டுப்படுத்துவது தொடர்பான முடிவுகள் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய எடுக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
விமான நிலையத்தின் வழியாக வருபவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் என்பதால் விமான நிலையத்தை உடனடியாக மூட முடியாது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனினும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு பொறிமுறை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இந்தியா-இலங்கைக்கு இடையிலான பரஸ்பர விமான போக்குவரத்து ஊடாக இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தனி ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்களின் வருகையை கட்டுப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.