நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.
ஆனால் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்படும் பிரதேசங்கள் முடக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே பாதுகாப்பு செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்று நிலைமையில் நாட்டை முழுமையாக முடக்கினால் பொருளாதார ரீதியில் நாடு வீழ்ந்து விடும். இதனால் நாட்டை முடக்காது கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கவே அரசாங்கம் முயற்சிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வைத்தியசாலைகளில் ஏற்படக் கூடிய இடப்பற்றாக்குறையை கருத்திற்கொண்டு இராணுவத்தினால் 1500 கட்டில்களை கொண்ட சிகிச்சை நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.