January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பாதாள உலக கேடியை போன்று ரிஷாட்டை கைது செய்ததன் பின்னணி என்ன?”: மனோ கணேசன் கேள்வி

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இன்று அதிகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கொழும்பிலுள்ள இல்லத்தில் வைத்து ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டார்.

இந்தக் கைது தொடர்பில் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

குறித்த பேஸ்புக் பதிவில் ”பாராளுமன்ற உறுப்பினர், கட்சித் தலைவர் நண்பர் ரிஷாட் பதியுதீனை இந்த ரமழான் மாதத்தில் அதிகாலை 3 மணிக்கு வீடு புகுந்து, தலைமறைவாக வாழும் பாதாள உலக கேடியை இழுத்துச் செல்வதை போல் கைது செய்ததன் பின்னுள்ள ஆவேசம் என்ன? ராஜபக்ஷ அரசின் கொடூர ராணுவ முகம் வெளிப்படுகிறதா?” என்று மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.