May 15, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா நெருக்கடியை சமாளிப்பதில் இந்தியாவுக்கு ஒத்துழைக்கத் தயார்’: சீனா அறிவிப்பு

file photo: https://www.fmprc.gov.cn/

கொரோனா தொற்று நெருக்கடியைச் சமாளிக்க இந்தியாவுக்கு தேவையான ஆதரவையும் உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

இந்திய மக்கள் விரைவில் மீண்டு வருவார்கள் எனவும் சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 வைரஸ் முழு மனித இனத்துக்குமான பொது எதிரி என்றும் சர்வதேச சமூகம் கொரோனா ஒழிப்பில் ஒன்றுபட வேண்டும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.

அதேபோன்று, தீவிரமான 2 ஆவது கொரோனா தொற்று அலையை சமாளிக்க தாம் இந்தியாவுடன் துணை நிற்பதாக அவுஸ்திரேலியா தெரிவித்திருக்கிறது.

“இந்திய நாடு எவ்வளவு வலிமையானது என்பதை நாங்கள் அறிவோம். இந்த உலகளாவிய சவாலில் தொடர்ந்து ஒற்றுமையுடன் பணியாற்றுவோம்”

என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.