பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணனிடம் பொலிஸார் இன்று வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
மன்னார் மற்றும் பருத்தித்துறை பொலிஸார் மாநகர சபை முதல்வர் அலுவலகத்துக்குச் சென்று வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சிங்கள மொழியில் வாக்குமூலத்தை பதிவு செய்ய பொலிஸார் முயற்சித்த போது அதற்கு மணிவண்ணன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ‘தான் தெரியாத மொழியில் எழுதப்பட்ட வாக்குமூலத்தில் கையொப்பமிட மாட்டேன்’ எனவும் பொலிஸாரிடம் உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், த.கலையரசன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோரிடம் இன்று வாக்குமூலம் பெறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.