”பொத்துவில் முதல் பொலிகண்டி வரை”யான போராட்டத்தின் பெரும் வெற்றிக்கு அரசின் அடக்கு முறைகளே காரணம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
அடக்கு முறைகளினால் தமிழர்களை ஒருபோதுமே அடக்கிவிட முடியாது என்பதனை முதலில் அரசு புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை”யான போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக அரசு வழக்குகளை பதிய நடவடிக்கை எடுக்கின்றது என்றார்.
இந்தப்போராட்டம் சிவில் அமைப்புக்கள் மற்றும் மதத் தலைவர்களினாலேயே ஒழுங்கு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் என்ற அடிப்படியிலேயே தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஆதரவளித்தன எனவும் குறிப்பிட்டார்.
2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலை, இதுவரை தமிழர் என்ற காரணத்தினால் அனுபவித்து வரும் துன்பங்களுக்கு நீதி கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.