January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி அனைவரிடையேயும் ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளது’

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி தமிழ்த் தாயக சிந்தனையுள்ள அனைத்து அரசியல் கட்சிகளிடையேயும், தமிழ்- முஸ்லிம் உறவிலும் ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளதாக பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியின் ஏற்பாட்டளர்களால் ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கம்” என்ற பெயரில் சிவில் அமைப்பொன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மை இனத்தவர்கள் மாறி மாறி ஆட்சி செய்யும் போதும் தமக்கான உரிமைகளை அங்கீகரிக்கப்படப் போவதில்லை என்றும் நீதிக்கான போராட்டத்தை உலகத்தை நோக்கி நகர்த்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான உத்தரவாதமாக, நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கான பொதுசன வாக்கெடுப்பொன்றும் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்கள் தமது சுய நிர்ணய உரிமைகளுக்காகப் போராடி வருகின்றதாகவும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இஸ்லாமிய மக்களின் அடிப்படை மத உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.