November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணியை கொழும்பு ஊடகங்கள் கண்டு கொள்ளாதது ஏன்? – அமெரிக்கத் தூதுவர்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியை கொழும்பு ஊடகங்கள் ஏன் கண்டு கொள்ளவில்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் அலேய்னா பி. டெப்லிட்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்கத் தூதர் வெளியிட்டுள்ள டுவிட்டர் தகவலில், குறித்த பேரணியை தமிழ் ஊடகங்களில் பார்த்ததாகவும் கொழும்பு ஊடகங்கள் பெரிய அளவில் பதிவு செய்யவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைதியான ஆர்ப்பாட்டம் என்பது ஜனநாயகத்திற்கு அவசியமானது என்றும் டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்கத் தூதுவரின் டுவீட்டின் தமிழாக்கம்:

“அமைதியான எதிர்ப்பு நடவடிக்கை என்பது எந்தவொரு ஜனநாயகத்திலும் ஒரு முக்கிய உரிமை. அத்தோடு முக்கிய, நியாயமான கவலைகள் செவிசாய்க்கப்பட வேண்டியவை. பொத்துவில் முதல் பருத்தித்துறை வரையான பேரணியை தமிழ் ஊடகங்களில் பார்த்தேன். ஆனால், கொழும்பைத் தளமாகக் கொண்ட ஊடகங்களில் ஏன் பெரியளவில் பதிவாகவில்லை என்பது தான் எனக்கு வியப்பாக உள்ளது”