January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி: யாழ். மாவட்டத்தில் பெருந்திரளானோர் பங்கேற்பு

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்துள்ளது.

இன்று காலை கிளிநொச்சியில் இருந்து ஆரம்பமான பேரணி யாழ்ப்பாணம் மாவட்ட  எல்லையை அடைந்த போது மக்கள் அணிதிரண்டு பேரணியை வரவேற்றனர்.

அதன்பின்னர் சாவகச்சேரி நகரை பேரணி அடைந்ததும் அங்கு மக்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தை வரவேற்றதுடன் அங்கு மேலும் பெருமளவானோர் அதனுடன் இணைந்துகொண்டனர்.

அதேபோன்று செம்மணி பகுதியிலும் பெருமளவான மக்கள் கூடிநின்று பேரணியை வரவேற்றனர்.

யாழ்ப்பாணத்தை அடைந்ததும் யாழ்ப்பாணம் பொதுநூலகம், உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவிடம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், நல்லூர் தியாகதீபம் நினைவிடம் ஆகிய இடங்களின் ஊடாக பொலிகண்டி நோக்கி பயணமாகவுள்ளது.

இன்றைய இந்தப் பேரணியின் இறுதி நாள் என்பதனால் அதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்.

This slideshow requires JavaScript.