May 28, 2025 22:54:21

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி 5 ஆவது நாளாக தொடர்கின்றது

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நீதிக்கான பேரணி 5 ஆவது நாளான இன்று கிளிநொச்சியில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

3 ஆம் திகதி பொத்துவிலில் ஆரம்பமான பேரணி நேற்று மாலை கிளிநொச்சியை வந்தடைந்தது.

இதனை தொடர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேரணி ஆரம்பமானது.

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல், நில அபகரிப்பு, முஸ்லிம்களின் உடல்களை கட்டாய எரிப்பு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் 1000 ரூபா சம்பளப் பிரச்சினை உட்பட அரச அடக்குமுறைகளைக் கண்டித்தும், நீதி கோரியும் இந்தத் தொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பொத்துவிலில் ஆரம்பமான பேரணி மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஊடாக நேற்று இரவு கிளிநொச்சியை வந்தடைந்ததுடன் இன்று மாலை பொலிகண்டியை அடையவுள்ளது.

பேரணியின் இறுதி நாளாக இன்றைய தினத்தில் பெருமளவானவர்கள் அதில் கலந்துகொண்டுள்ளனர்.