November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை அகதிகள் முகாம் இனி ‘மறுவாழ்வு முகாம்’; முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

இலங்கை அகதிகள் முகாம் இனி ‘இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள்’ என்றழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ் நாடு சட்டப் பேரவையில் வேளாண்மை, கால்நடை மீன்வளம், பால்வளத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இதன்போது தி.மு.க உறுப்பினர் பூண்டி கலைவாணன், ”இலங்கை அகதிகள் நலனுக்காகவும், வாழ்க்கைத் தரம் மேம்படுத்துவதற்காகவும் முதலமைச்சர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதை பாராட்டி பேசினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

“உறுப்பினர் பேசியது போலவே தானும் நேற்றைய தினம் (27) இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என்றே குறிப்பிட்டதாகவும், இன்று முதல் ‘இலங்கை தமிழர் அகதிகள் முகாம்’ என்பது ‘இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம்’ என அழைக்கப்படும் எனவும் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும்” தெரிவித்துள்ளார்.

‘இலங்கைத் தமிழர்கள் அநாதைகள் அல்ல’ எனவும் அவர்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கைத் தமிழர்கள் நலனில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கும் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நேற்றைய தினம் சட்டப் பேரவையில் சட்டப் பேரவை விதி எண் 110 இன் கீழ் இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.