January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில் இணைந்து செயல்படுவோம்”: ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளதையடுத்து திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்’ என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

தேசத்தின் வளர்ச்சியிலும் தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதிலும் இணைந்து செயல்படுவோம். கொரோனா தொற்று நோயை தோற்கடிக்க ஒன்றிணைந்து  செயல்படுவோம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்த தமிழக மக்களுக்கு நன்றி. மாநிலத்தின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் எனவும் புகழ்பெற்ற தமிழ் கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்துவோம் எனவும் குறித்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அதேபோல் கேரளாவில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள பினராய் விஜயன் மற்றும் மேற்கு வங்கத்தில் வெற்றிபெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் மம்தா பானர்ஜிக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.