January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திமுக தொண்டர்கள் வெற்றிக் கொண்டாட்டம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் நிலையில் கட்சித் தொண்டர்கள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று பிற்பகல் 1.30 மணி வரையான வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் திமுக 140 ற்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதுடன், அதிமுக 87 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியிலும் முன்னிலையில் இருக்கின்றது.

இந்நிலையில் திமுக தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்திற்கு முன்னால் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருந்த போது, கொவிட் தடுப்பு சுகாதார ஒழுங்குவிதிகளை கடைபிடித்து வீட்டில் இருந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுமாறு ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

எனினும் இன்று காலை முதல்  தொண்டர்கள் வீதிகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடு உள்ள நிலையிலும், தேர்தல் வெற்றி உற்சாகத்தில் வீதிகளில் தொண்டர்கள் கொண்டாட்டங்களை நடத்தி வருகின்றனர்.