January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒமிக்ரோன் பரவல் அடைந்த நாடுகளின் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு!

கொவிட் வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரோன் தொற்று அடையாளம் காணப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

“அதிகமாக பரவக்கூடிய” இந்த புதிய மாறுபாடு கடந்த வாரம் தென்னாபிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் இந்த மாறுபாடு பரவல் உறுதியான 41 ஆவது நாடாக ஜாம்பியா பதிவாகியுள்ளது.

கடந்த வாரத்தில் கொவிட் தொற்று உறுதியான மூவரிடம் இந்த புதிய மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாக நாட்டின் சுகாதார அமைச்சு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மூவரில் இருவர் சமீபத்தில் வெளிநாடு சென்று வந்தவர்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொற்று உறுதியான மற்ற பெண் வெளிநாட்டிற்குச் செல்லாத ஒருவர் என்பதோடு அவருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, ஒமிக்ரோன் மாறுபாடு 41 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது இரண்டு நாட்களுக்கு முன்பு 23 ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.