ஒமிக்ரோன் வைரஸ் குறித்து உலக மக்கள் பீதியடையத் தேவையில்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் வைரஸை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதான விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தற்போதளவில் ஒமிக்ரோன் வைரஸ் 40 க்கு அதிகமான நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
தடுப்பூசி பெற்றுக்கொண்ட வீதம் குறைவாக உள்ள நாடுகளில் தொற்றுப் பரவல் தீவிரமாக இருப்பதாக சௌம்யா சுவாமிநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனாவின் புதிய திரிபுகளைக் கட்டுப்படுத்தும் திறன்கொண்ட தடுப்பூசிகளை உலகம் கண்டுபிடித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.