July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”சீனாவின் இராணுவத் தளமாக இலங்கை உள்ளிட்ட 13 நாடுகள் மாறலாம்”: பென்டகன் அறிக்கை

சீனாவின் இராணுவத் தளங்களாகவோ அல்லது வசதி வழங்கும் நிலையங்களாகவோ இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

தமது இராணுவ பலத்தை பரந்த பிரதேசத்தில் பேணும் நோக்கில் இவ்வாறாக பல்வேறு நாடுகளை பயன்படுத்துவதற்கு சீனா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என பென்டகன் அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

சீன இராணுவ மற்றும் பாதுகாப்பு அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க பாதுகாப்பு பென்டகன் இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.

இதன்படி இலங்கை, கம்போடியா, மியன்மார், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேஷியா மற்றும் பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், கென்யா, சீசல்ஸ் உள்ளிட்ட 13 நாடுகளை தமது இராணுவத்திற்கு வசதி வழங்கும் இடமாக சீனா பயன்படுத்துவதற்கு இடமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா தமது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை வலுப்படுத்துவதற்கு இதன் மூலம் எதிர்பார்ப்பதாகவும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.