2021 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் தளர்வு ஏற்பட்டுள்ளது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலப் பகுதியில் பொருளாதார வளர்ச்சி 4.9 வீதத்தையே காட்டியுள்ளது.
இதற்கு முன்னைய காலாண்டுடன் ஒப்பிடும் போது, இது மிகக் குறைவான வளர்ச்சி வேகம் என்று சீனா தெரிவித்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் 8 வீதமாக பதிவாகியிருந்தது.
அடுத்த காலாண்டில் நிலைமை இதனைவிடவும் மோசமாகும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
எரிசக்தி பற்றாக்குறை, கொவிட் பரவல் மற்றும் சில தொழில் துறைகள் மீதான சீனாவின் அழுத்தம் போன்றன இந்த தளர்வுக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனா அண்மைக் காலமாக தளர்வை சந்தித்துள்ளது.