January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளின் எண்ணிக்கையை 7 ஆக குறைத்தது பிரிட்டன்!

பிரிட்டன் தனது பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பான சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளின் எண்ணிக்கையை 54 இல் இருந்து 7 ஆக குறைப்பதாக அறிவித்துள்ளது.

சிவப்பு பட்டியலில் உள்ள கொலம்பியா, டொமினிக்கன் குடியரசு, ஈக்வடார், ஹைட்டி, பனாமா, பெரு, வெனிசுலா ஆகிய 7 நாடுகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் உள்ளன.

இதன்படி, தென்னாப்பிரிக்கா, பிரேசில் மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படும் விதிமுறையில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

மேலும் 37  நாடுகளிலிருந்து பிரிட்டனிற்கு வரும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கும் சில கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன.

சிவப்பு பட்டியல் இல்லாத நாட்டிலிருந்து வரும் முழு தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் இனி பயணத்தை ஆரம்பிக்கும் முன் கொவிட் சோதனை எடுக்க வேண்டியதில்லை என பிரிட்டன் தெரிவித்துள்ளது.

எனினும் அனைத்து பயணிகளும் – ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களை தவிர நாட்டுக்குள் பிரவேசித்து இரண்டு நாட்களுக்குப் பிறகும் முன்பதிவு செய்து பணம் செலுத்தி பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும்.

இதேவேளை, பிரிட்டனில் NHS கொவிட் பாஸ்கள் இப்போதும் பெரிய நிகழ்வுகள் அல்லது இரவு விடுதிகளுக்கு செல்வதற்கு கட்டாயமானதாக உள்ளது.