July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தானுக்கான ஜிஎஸ்பி வரிச் சலுகையை நீடித்தது ஐரோப்பிய ஒன்றியம்

file photo: Twitter/ EUPakistan

பாகிஸ்தானுக்கான ஜிஎஸ்பி வரிச் சலுகையை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பாகிஸ்தானிய வர்த்தகர்கள் வரிச் சலுகைகளுடன் ஏற்றுமதிகளை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது.

மனித உரிமை சார்ந்த பிரச்சினைகளை சுட்டிக்காட்டி, பாகிஸ்தானுக்கான ஜிஎஸ்பி வரிச் சலுகைகள் தற்காலிகமாக நீக்குவதில் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தியிருந்தது.

எனினும், பாகிஸ்தான் இம்முறை ஜிஎஸ்பி வரிச் சலுகைகளைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

பாகிஸ்தானின் மொத்த ஏற்றுமதியில் 28 வீதமானவை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கே செல்கிறது.