January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானிஸ்தான் மாணவிகளுக்கு தாலிபான்கள் அறிவித்துள்ள புதிய ஒழுங்கு விதிகள்

ஆப்கானிஸ்தான் மாணவிகளுக்கு தாலிபான்கள் புதிய ஒழுங்கு விதிகளை அறிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகங்கள் பாலின அடிப்படையில் பிரிக்கப்படும் என்றும் மாணவிகளுக்கு புதிய ஆடை ஒழுங்குகள் அறிமுகப்படுத்தப்படும் என்று தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.

பெண்கள் கல்வியைத் தொடர அனுமதிக்கப்பட்டாலும், ஆண்களுடன் கலந்து கற்கும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று ஆப்கான் உயர் கல்வி அமைச்சர் அப்துல் பாகி ஹக்கானி தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு போதிக்கப்படும் பாடங்கள் மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1996 முதல் 2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தாலிபான்கள் ஆட்சியில் இருந்த போது, பெண்கள் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வியைத் தொடர்வது தடை செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தாலிபான்கள் இம்முறை ஆட்சிக்கு வரும் போது, பெண்களின் கல்வி மற்றும் தொழில் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட மாட்டாது என்று அறிவித்திருந்தனர்.

எனினும், ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதாக தெரியவருகிறது.