January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தான் ஹோட்டல் குண்டுத் தாக்குதல்; சீன தூதுவர் இலக்கு வைக்கப்பட்டதாக சந்தேகம்

பாகிஸ்தானின் சொகுசு ஹோட்டல் ஒன்றுக்கு மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள பலூகிஸ்தான் மாநிலத்தின் குவெட்டா நகரில் இந்த குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கான சீன தூதுவர் இலக்கு வைக்கப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தாக்குதலுக்கு பாகிஸ்தான் தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், தாக்குதல் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை.

குறித்த ஹோட்டலுக்கு சீன தூதுவர் வர இருந்த நிலையிலேயே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செரீனா ஹோட்டல் அரச உயர்மட்ட தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் தங்கும் பிரதான இடம் என்றும் ஹோட்டலின் வாகன தரிப்பிடத்தில் குண்டு வெடித்துள்ளதாகவும் பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.