February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுப்பூசி போட்டு இரண்டாவது நாளில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரொனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டு இரண்டு நாட்கள் ஆகின்ற நிலையில், அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

68-வயதான இம்ரான் கான் இப்போது தம்மை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொண்டுள்ளார்.

அண்மைய நாட்களாக பல்வேறு பொது நிகழ்வுகளிலும் பாகிஸ்தான் பிரதமர் கலந்துகொண்டிருந்தார்.

கடந்த மாதம் இலங்கைக்கும் அவர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

பாகிஸ்தானில் இப்போது மூன்றாவது கொரோனா அலை காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.