
குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் 3 அதிகாரிகளுக்கும் தூதரகத்தின் கீழுள்ள பாதுகாப்பு இல்லத்தில் இருந்த பணிப்பெண்கள் 44 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஒக்டோபர் மாதம் 11ம் வரை தூதரகம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இக்காலப்பகுதியில் அவசர தேவைகளுக்கு slemb.kuwait@mfa.gov.lk எனும் மின்னஞ்சல் வாயிலாக தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குவைத் தூதரகத்தின் பேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.