இலங்கை, மினுவங்கொடை பிரதேசத்தின் உடுகம்பொல பகுதியில் நடந்த திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்ட 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 26 ஆம் திகதி நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் மொத்தமாக 250 விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மணமகளுடன் தொடர்புடைய 40 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்பு செயற்பாட்டு மையம் மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசு திருமண நிகழ்வில் கலந்துகொள்ள 50 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ள போதிலும் குறித்த நிகழ்வில் சுகாதார விதிமுறைகள் மீறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை இலங்கையில், இதுவரை 69,348 கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், 63,401 குணமடைந்துள்ளனர்.
அத்தோடு, தொற்றுக்குள்ளான 5,591 பேர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், 356 பேர் உயிரிழந்துள்ளனர்.