பாகிஸ்தானின் சீல்கோட்டில் பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்டதையடுத்து, சில சர்வதேச வர்த்தக நிறுவனங்களின் அதிகாரிகள் பாகிஸ்தானிற்கு வருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, சர்வதேச தரத்திற்கு அமைவாக இயங்கி வரும் நிறுவனங்களை தணிக்கை செய்வதற்காக வெளிநாட்டு கணக்காளர்கள் பாகிஸ்தானுக்கு வர மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கை நிறுவனங்களின் கணக்காய்வாளர்கள் இவ்வாறு பாகிஸ்தானுக்கு வர மறுத்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் நினைவாக நேற்று (08) இரவு இஸ்லாமாபாத்தில் மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியைகள் நேற்று கணேமுல்ல – பொல்ஹேன பொது மயானத்தில் இடம்பெற்றன.