July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எக்ஸ் பிரஸ் பேர்ல் கொள்கலன் கப்பலின் கழிவுகளை அகற்ற புதிய நிறுவனம் ஒப்பந்தம்!

இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான எக்ஸ் பிரஸ் பேர்ல் கொள்கலன் கப்பலின் மேற்குக் கரையோரத்தில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்காக ஷாங்காய் சால்வேஜ் நிறுவனத்துடன் (SCC) ஒப்பந்தத்தில் கப்பல் உரிமையாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இதேவேளை, கப்பலில் ஏற்பட்ட தீ மற்றும் கப்பல் மூழ்கும் போது கடலுக்கு விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் மற்றும் கழிவுகளை அகற்றும் பணியை Resolve Marine ஆரம்பித்துள்ளது.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சைட் ஸ்கேன் சோனார் செயல்பாடுகள் மூலம் குப்பைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இலங்கை அதிகாரிகள் தங்களது இரண்டாவது இழப்பீட்டு கோரிக்கையை கப்பல் உரிமையாளரிடம் கோரியுள்ளனர்.

“தற்போது கொழும்பில் உள்ள ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ள எஞ்சிய எட்டு பணியாளர்களை நாடு திரும்புவதற்கு இலங்கை அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும்  எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் குழு தெரிவித்துள்ளது.

எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் மே மாதம் இலங்கை கடல் பரப்பி்ல் தீப்பிடித்து எரிந்த கப்பலின் கழிவுகள்ஆழமற்ற நீரில் மூழ்கியதோடு, டெகன் கணக்கில் குப்பைகளை இலங்கையின் கடற்பரப்பில் விட்டுச் சென்றுள்ளது.