May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசாங்கம் பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பொம்மையாக மாறிவிட்டது’: சஜித் பிரேமதாஸ

அரசாங்கம் பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பொம்மையாக மாறிவிட்டதாகவும் நாட்டில் உள்ள மீனவ சமூகத்தின் உரிமைகளை வெளிநாட்டு டொலர் தரகர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இன்ற கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராயும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள மீனவ சமூகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலினால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொட மீன்பிடித் துறைமுகத்தை அண்டியுள்ள மீனவ சமூகத்தை எதிர்கட்சித் தலைவர் சந்தித்து அவர்களின் பிரச்சனைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, மீனவர்கள் தமது பிரச்சினைகளைக் கூறி, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் மீன்பிடித் தொழிலில் புரட்சிகர மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

This slideshow requires JavaScript.