February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லையெனில் இலங்கையர்களை நாட்டுக்கு அழைக்கவும்’: ஜேவிபி

பாகிஸ்தானில் உள்ள இலங்கையர்களுக்கு பாதுகாப்பு இல்லையெனில், அவர்களை நாட்டுக்கு அழைக்கும்படி ஜேவிபி வேண்டுகோள் விடுத்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி நடத்திய செய்தியாளர் மாநாட்டில், அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரியன்த குமாரவைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன் பின்னர் எந்தவொரு இலங்கையருக்கும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அனுரகுமார திசாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

அடிப்படைவாதங்களைத் தோற்கடிக்கும் சவால் இலங்கைக்கு இருப்பதாகவும் ஜேவிபி சுட்டிக்காட்டியுள்ளது.