ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதோடு, பஸ்ஸூம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை (04) ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று ஹொரவ்பொத்தானை அளுத் ஓயா பகுதியில் வைத்து வேனில் வந்த சிலரால் சாரதியுடன் கடத்திச் செல்லப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட கல் ஓயா பொலிஸார் கடத்தப்பட்ட பஸ்ஸை சாரதியுடன் கண்டுபிடித்துள்ளதோடு, ஆறு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 37 மற்றும் 50 வயதுடைய பிங்கிரிய மற்றும் வீரம்புகெதர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஹொரவ்பொத்தானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் இன்று (04) கெபித்திகொல்லாவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.