மீண்டும் ஒருமுறை பாடசாலைகளை மூட வேண்டாம் என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
கொவிட் தொற்று பரவல் காரணமாக பாடசாலைகள் நீண்டகாலமாக மூடப்பட்டமையால் சிறுவர்களின் அறிவாற்றல் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சரியான பெற்றோரின் வழிகாட்டுதல் இல்லாமல் ஒன்லைனில் அதிக நேரம் செலவிடும்போது சிறுவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்து பேராயர் வலியுறுத்தினார்.
எனவே மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாடசாலைகளை முடிந்தவரை மூடாமல் இருக்குமாறு அதிகாரிகளிடம் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்தார்.