May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2023 முதல் அறிமுகம்!

இலங்கையில் மனித மேம்பாட்டை இலக்காகக் கொண்டு நாட்டிற்கு ஏற்ற பணியாளர்களை உருவாக்கும் புதிய கல்வி சீர்திருத்தங்களை 2023 முதல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சீர்திருத்தங்கள் 2014 ஆம் ஆண்டின் கபொத சாதாரண தர வகுப்பில் இருந்து  அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சர்வதேச போக்குகளை கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சீர்திருத்தங்கள் இலங்கையின் அடையாளத்தை மாற்றாத வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

நாட்டில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பாடசாலைகள் இருந்த போதிலும் அவற்றில் 90 வீதமானவை ஆயிரத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளாகும்.

ஆரம்பக் கல்விக்குப் பிறகு தேசியப் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் வாய்ப்பு 22 சதவீதமானவருக்கு மட்டுமே கிடைக்கின்றது.

தரம் 6 க்கு மேல் 70 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்களை சேர்க்கக்கூடிய வகையில் நாடு முழுவதும் 1,170 தேசிய பாடசாலைகளை நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், 90 சதவீதத்திற்கும் அதிகமான ஆரம்ப பாடசாலைகள் தேசிய பாடசாலைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. தேசிய பாடசாலைகள் ஒவ்வொன்றுக்கும் ஆய்வுக் கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் என சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்காக ஆசிய வங்கி மற்றும் ஜப்பான் வறுமை ஒழிப்பு நிதியத்தால் உதவிகள் வழங்கப்படவுள்ளன.

புதிய சீர்திருத்தங்கள் அறிவு, திறன்களை கொண்ட ஆரோக்கியமான மாணவர்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.