April 25, 2025 9:02:52

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘படகுப் பாதை’ விபத்து: குறிஞ்சாக்கேணி – கிண்ணியா இடையே பஸ் சேவை ஆரம்பம்

‘படகுப் பாதை’ விபத்துக்குள்ளாகி 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களை ஏற்றிச் செல்வதற்காக பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, காக்காமுனையில் இருந்து நடுத்தீவு, குறிஞ்சாக்கேணி ஊடாக கிண்ணியா வரை இந்த பஸ் சேவை இடம்பெறும்.

நேற்று காலை அந்தப் பகுதியில் படகுப் பாதை விபத்துக்கு உள்ளானதால் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பகுதி மக்கள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையிலேயே இன்று முதல் பஸ் போக்குவரத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.