
இலஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்த குற்றச்சாட்டில் தெல்தெனிய நீதிமன்றத்தின் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் பெண் பதிவாளர் கடற்படை அதிகாரி ஒருவரிடம் 10 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற முற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த கடற்படை அதிகாரி மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய இலஞ்ச- ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.