July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!

2020/2021 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன.

இதன்படி இலங்கைப் பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் admission.ugc.ac.lk/ அல்லது www.ugc.ac.lk என்ற இணையத்தளங்களுக்கு பிரவேசிப்பதன் ஊடாக வெட்டுப் புள்ளிகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

2020 ஆம் ஆண்டுக்கான கபொத உயர்தரப் பரீட்சை பெறுபேற்றுக்கு அமைவாகவே இந்த வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 40 ஆயிரம் பேர் வரையிலான மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.