May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2020 ஆம் ஆண்டின் செயல்முறை பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு!

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்கள் தொடர்பான செயல்முறை பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த பரீட்சைகள் டிசம்பர் 1 முதல் 11 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதையடுத்து, அழகியல் பாடங்களில் செயல்முறை பரீட்சைகளை குறித்த தினத்தில் நடத்த முடியாது போயிருந்தது.

இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப் பரிசில், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறவுள்ள தினங்கள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 5 ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை 2022 ஜனவரி 22 ஆம் திகதியும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல மார்ச் 5 ஆம் திகதி வரையிலும் மற்றும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 23 ஆம் திகதி முதல் ஜுன் 1 ம் திகதி வரையிலும் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.