July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா” – சுப்ரமணியன் சுவாமி

Photo : twitter /Subramanian Swamy

“இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா என்பது ராஜபக்‌ஷ ஆட்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று சுப்ரமணியன் சுவாமி இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவின் அழைப்பின் பேரில் இலங்கை வரவுள்ளார்.

இதனிடையே இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையின் கடந்த கால ஆட்சியாளர்கள் சீனாவுடன் பேணிவந்த நெருக்கமான உறவு தற்போது காணப்படவில்லை என கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்தியா – இலங்கை உறவுகளுக்கு புத்துயிர்ப்பு அளிக்கும் வகையில் பாதை வரைபடமொன்றை இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட உருவாக்கியுள்ளமை வரவேற்கத்தக்கது என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவின் குடும்பத்தாருடன் நவராத்திரி விழாவில் பங்கேற்குமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பயணத்தின் போது இலங்கையின் பாதுகாப்பு படைகளை சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்கும் நிகழ்வொன்றில் தேசிய பாதுகாப்பு தொடர்பில் உரையாற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.