May 23, 2025 21:58:42

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இறக்குமதி கட்டுப்பாடுகளில் நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மத்திய வங்கிக்கு பணிப்புரை

இலங்கையில் இறக்குமதி கட்டுப்பாடுகளை குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு மத்திய வங்கி ஆளுநருக்கு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிந்தளவுக்கு குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக வர்த்தகர்களும் பொதுமக்களும் எதிர்கொண்டுள்ள சிரமங்களைக் கருத்திற்கொண்டே, பிரதமர் இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

பிரதமரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இதுதொடர்பில் தீர்வுகளை முன்வைக்கவுள்ளதாக தெரியவருகிறது.